நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் தவிர சித்தார்த், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர்,பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் ஊழலுக்கு எதிரான கதைகளத்தில் உருவாகியுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் முழுவதும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் நேற்று (ஜூன் 25) இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீ, கமல்ஹாசன் குறித்து பேசியுள்ளார்.
“I want to work with you sir. Someday I will crack a script and come to you sir💯. You are the Bible and encyclopaedia of Cinema🛐”
– Atlee about Ulaganayagan #KamalHaasan at #Indian2 Mumbai trailer launch pic.twitter.com/QptUfBvoBL
— AmuthaBharathi (@CinemaWithAB) June 25, 2024
அவர் பேசியதாவது, “எதிர்காலத்தில் என் மகனுக்கு சினிமா பற்றி தெரிய வேண்டும் என்றால் சினிமா என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ள கமல் சாரின் அனைத்து படங்களையும் அவன் பார்க்க வேண்டும். கமல் சார் சினிமாவின் பைபிள் மற்றும் என்சைக்ளோபீடியா, சார் நான் உங்களுடன் பணி புரிய விரும்புகிறேன். உங்களுக்காக ஸ்கிரிப்ட் எழுதிவிட்டு உங்களிடம் வருகிறேன்” என்று தெரிவித்தார்.