இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர். இவர் கடந்த 1993 இல் ஜென்டில்மேன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி என பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே சமயம் இவர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படமும் உருவாகி இருக்கும் நிலையில் இப்படம் நாளை (ஜனவரி 10) உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சங்கரிடம் பயோபிக் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் சங்கர், “இல்லை. இதுவரைக்கும் அந்த மாதிரி ஐடியா வரவில்லை. ஆனால் அப்படி பயோபிக் படத்தை எடுத்தால் ரஜினியின் பயோபிக் படத்தை தான் எடுப்பேன். இதுவரைக்கும் இது தோன்றவில்லை நீங்கள் கேட்டவுடன் ரஜினி தான் என் நினைவுக்கு வந்தார். நானே இப்படி சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை” என்று பதிலளித்துள்ளார்.
Would you like to take a biopic, sir..?
Dir #Shankar – No sir, I have no idea about this. If you take it, Rajini sir, you should take the Bio Pic.#Rajinikanth | #GameChanger | #Coolie
pic.twitter.com/wJrRbV3zbk— Movie Tamil (@MovieTamil4) January 9, 2025
ஏற்கனவே ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.O ஆகிய படங்களை இயக்கியிருக்கும் சங்கர், இனிவரும் காலத்தில் ரஜினியின் பயோபிக் படத்தை இயக்குவார் என்றால் அந்த பயோபிக் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.