நடிகர் பரத் தமிழ் சினிமாவில் காதல் படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானார். அதன் பின்னர் பல ஆக்ஷன் படங்களிலும் நடித்து வந்த பரத்திற்கு சமீப காலமாக வெளியான படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. எனவே இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா நடித்திருக்கும் சுள்ளான் சேது படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அடுத்ததாக பரத் நடிப்பில் காளிதாஸ் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் திரில்லர் கதைக்களத்தில் வெளியான படம்தான் காளிதாஸ்.
இந்த படத்தில் நடிகர் பரத் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது காளிதாஸ் இரண்டாம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டார் இயக்குனர் ஸ்ரீ செந்தில். அதன்படி பரத் மற்றும் அஜய் கார்த்தியின் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு காளிதாஸ் 2 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எஸ்கே பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சாம் சிஎஸ் -இன் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு சுரேஷ்பாலா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் இதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீ செந்தில் காளிதாஸ் 2 படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “காளிதாஸ் 2 படம், காளிதாஸ் படத்தின் தொடர்ச்சி இல்லை ஆனால் காளிதாஸ் யுனிவர்சின் தொடர்ச்சியாக இருக்கும். எமோஷனல் கலந்த கிரைம் ஆக்சன் திரில்லர் படமாக இது உருவாகிறது. காளிதாஸ் படத்தில் நடித்தவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். ஆனால் இது வேறு மாதிரியான கதை. காளிதாஸ் படத்திற்கு பின்னர் நாங்கள் வேறொரு படம் பண்ண திட்டமிட்டோம் ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -