spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரூ.88 ஆயிரம் கோடிக்கு டிஸ்னியை வாங்கும் ரிலையன்ஸ்?

ரூ.88 ஆயிரம் கோடிக்கு டிஸ்னியை வாங்கும் ரிலையன்ஸ்?

-

- Advertisement -
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம், டிஸ்னியின் ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டை விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னியின் ஹாட்ஸ்டார் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகும். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் மூலம் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை இத்தொடர் பெற்று இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்தை ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் கைப்பற்றியது. அதோடு, வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான படங்களை ஒளிபரப்பும் உரிமத்தையும், டிஸ்னியிடம் இருந்து ஜியோ நிறுவனம் சொந்தமாக்கியது. இதனால், கடந்த சில மாதங்களாகவே ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது சந்தாதாரர்களை தொடர்ந்து இழந்து வருகிறது. இந்நிலையில் தான் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் இந்திய செயல்பாட்டை மட்டும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுவிடுவது தொடர்பாக டிஸ்னி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது முடிவானால், ஸ்டார் இந்தியா எனும் பேனரின் கீழ் வரும் வணிகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றுவது உறுதியாகி விடும்.

தற்போதைய நிலைமையில், 66 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 83 ஆயிரம் கோடி ரூபாய் வரை விலைபேசி, இந்த ஒப்பந்தத்தை முடிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

MUST READ