spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிமுகவில் இணையும் சத்யராஜ் மகள்?... திவ்யாவின் பதிவால் பரபரப்பு...

திமுகவில் இணையும் சத்யராஜ் மகள்?… திவ்யாவின் பதிவால் பரபரப்பு…

-

- Advertisement -
தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகர் சத்யராஜ் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் தற்போது பல படங்களில் அவர் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். குணச்சித்திர வேடங்களிலும், தந்தை வேடங்களிலும் சத்யராஜ் நடித்து வருகிறார். சத்யராஜூக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் சிபி சத்யராஜ் கோலிவுட்டில் நாயகனாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

சத்யராஜின் மகள் திவ்யா. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, அரசியலுக்கு வர போகிறார் என்றும், பாஜகவில் இணைய போகிறார் என்றும் தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. சத்யராஜ் தி.க. கொள்கைகளில் ஆர்வம் கொண்டனர். ஆனால், அவரது மகள் திவ்யா பாஜகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வியை நெட்டிசன்களும், ரசிகர்களும் எழுப்பி வந்தனர். அதற்கு பதில் அளித்த திவ்யா, மக்களவை தேர்தலில் பங்கேற்க பாஜக தன்னை அழைத்தது உண்மை தான் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியானதை ஒட்டி, சத்யராஜ் மகள் திவ்யாவின் பதிவு வைரலாகி வருகிறது. அதில் திராவிட மண் என்றும், வெற்றி நமக்கே என்றும் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் திவ்யா சத்யராஜ் விரைவில் திமுகவில் இணைவார் என்று இணையத்தில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது

MUST READ