Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தில் விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘தளபதி 69’ படத்தில் விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

-

நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 'தளபதி 69' படத்தில் விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட இருப்பதால் தளபதி 69 படம் தான் கடைசி படம் என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். 'தளபதி 69' படத்தில் விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?இந்நிலையில் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி அந்த லிஸ்டில் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், அட்லீ, த்ரி விக்ரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் சமீபகாலமாக எச் வினோத் பெயரும் இணைந்துள்ளதாக பல தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் தளபதி 69 படத்திற்காக விஜயின் சம்பளம் குறித்த தகவல் மற்றொரு பக்கம் பரவி வருகிறது. அதாவது கோட் படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய் தனது கடைசி படத்திற்கு வரியுடன் சேர்த்து 250 கோடி பேசப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ