இயக்குநரை படுத்திஎடுத்துவிட்டேன்: சமூக வலைத்தளங்களில் மோசமாக பேசாதீர்கள் – ஏ.ஆர் ரகுமான் மகள் கதீஜா ரகுமான் வேண்டுகோள்!
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் குடும்பத்தில் இருந்து இவரது மகன் ஏ.ஆர் அமீன் இசைத்துறையில் நுழைந்து சினிமா பாடல்களையும் சுயாதீன ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார். இதே வரிசையில் ஏ ஆர் ரகுமான் மகள் கதீஜா ரகுமான் பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட சில படங்களில் பாடல் பாடியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் ஹலீதா சமீம் இயக்கியுள்ள ‘மின்மினி’ என்ற படத்தில் இசை அமைப்பாளராக கதீஜா அறிமுகம் ஆகியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஹலீதா சமீம், இசை அமைப்பாளர் கதீஜா ரகுமான், இயக்குனர் நித்திலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கதீஜா ரகுமான்,
இது நடக்கிறது என்று என்னால் நம்பமுடியவில்லை. ரொம்ப நன்றி. ஹலீதா மேடம் 2022ம் ஆண்டு என்னை அணுகினார். அப்போது நான் தயாராக இல்லை. அதற்குள் படம்முடிந்து ரிலீஸ் ஆகியிருக்கும் என்று நினைத்தேன். அதன்பிறகு அவரை சந்தித்த போது அவருக்கு எனது வேலை பிடித்தது. பின்னர் வேறு ஒருவனிடம் சென்றுவிட்டார். உங்களுக்கு எது பிடிக்குமோ அதை பண்ணுங்க என்றேன். உங்களுடன் தான் வேலை செய்வேன் என்றார். அவர்களுடன் வேலை செய்தது கடினமாக இருந்தது என்று நான் சொல்ல மாட்டேன். 8 மாதம் நன்றாக போனது. என்னை மொத்தமாக மோல்ட் செய்தார்.
நீங்கள் படத்தில் இருக்கிறேன் மட்டும் சொல்லுங்கள் நான் உங்களுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்றார். அவருக்கு என்ன வேண்டுமோ அதில் இயக்குனர் தெளிவாக இருந்தார். அது எனக்கு சுலபமாக இருந்தது. முதலில் ட்ரைலர் கட் கொடுத்தார். அப்பவே நான் பயந்துபோய் என்னால் பண்ண முடியாது என்று எனது கணவரிடம் கூறினேன். அவர் தயவுசெய்து விட்டுவிடாதே காத்திரு என்றார். ஸ்டூடியோவில் இருக்கும் நண்பர்கள் எல்லாம் நாங்கள் கூட இருக்கிறோம் நீ பண்ணு என்று சொன்னார்கள். அந்த எட்டு மாதமும் நான் நேரம் எடுத்து தான் பண்ணுவேன் என்றேன். ஹலீதாவும் எனக்கு நேரம் கொடுத்தார்.
இந்த எட்டு மாதத்தில் இயக்குனரை நான் படுத்தி எடுத்துவிட்டேன். எப்படி என்னை நம்புனீர்கள், என்னிடம் அப்படி என்ன பார்த்தீர்கள் என்று அவரை படுத்தி எடுத்தேன். ஒருவழியாக பின்னணி இசை முடிந்தது. ஆனால் மனது மீண்டும் பிளாங் ஆகிவிட்டது. உங்கள் மனதில் இருந்து என்ன வருதோ அதை பண்ணுங்க என்று ஹலீதா சொன்னார். எனக்கு அற்புதமான டீம் கிடைத்தது.
நான் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டபோது நிறைய பேர் ஏன் இவருக்கு வாய்ப்பு கொடுத்தீங்க என்று கேட்டனர். அது என்னை ரொம்ப தொந்தரவு செய்தது. அப்போது எனது இயக்குனருக்கு பெருமை சேர்த்து தர வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.
இப்படத்தை எல்லோரும் பீல் குட் படம் என்று சொல்கிறீர்கள் ஆனால் இது அப்படிப்பட்ட படமல்ல. இது ஒரு லவ் ஸ்டோரி படம் என்று உங்களை நினைக்க வைக்கிறார்கள் அது உண்மை கிடையாது. பாடல்கள் பிடித்திருந்தால் சப்போர்ட் பண்ணுங்க. சமூக வலைத்தளங்களில் ரொம்ப மோசமாக பேசாதீர்கள் பேசினார்.