spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்திய சினிமாவே திரும்பிப் பார்த்த எந்திரன்… மீண்டும் புதுப்பொலிவுடன் 4K தரத்தில்!

இந்திய சினிமாவே திரும்பிப் பார்த்த எந்திரன்… மீண்டும் புதுப்பொலிவுடன் 4K தரத்தில்!

-

- Advertisement -

எந்திரன்’ திரைப்படம் 4k HDயில் புது பொலிவுடன் உருவாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு ‘எந்திரன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

we-r-hiring

இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஐஸ்வர்யாராய், டேனி டென்சோங்பா, சந்தானம், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ரோபோவாக நடித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் இந்த படத்தில் உள்ள கிராபிக்ஸ் பணிகள் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி மொழியிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. அது மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்தப் படம் வெளியிடப்பட்டது. உலக அளவில் இந்த படம் 290 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்தது எந்திரன் படம். 12 வருடங்களை கடந்துள்ள இந்த திரைப்படம் டிஜிட்டல் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் 4k HD யில் புது பொலிவுடன் தற்போது மீண்டும் SUN NXT ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

MUST READ