Homeசெய்திகள்சினிமாஜார்ஜ் மரியான், சார்லி கூட்டணியின் எறும்பு படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

ஜார்ஜ் மரியான், சார்லி கூட்டணியின் எறும்பு படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

-

எறும்பு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எறும்பு திரைப்படம் ஜார்ஜ் மரியான், சக்தி ரித்திக், மோனிகா சிவா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து சார்லி, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 16ஆம் தேதி வெளியானது. இதனை போத படத்தை இயக்கிய ஜி சுரேஷ் இயக்கியுள்ளார்.

மன்ட்ரூ ஜி வி எஸ் ப்ரோடுக்ஷன்ஸ், பிளாக்பஸ்டர் ப்ரோடுக்ஷன் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. அருண் ராஜ் இதற்கு இசை அமைத்துள்ளார். கிராமத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அண்ணன் தங்கை உறவு காண்பிக்கப்படுகிறது.

ஏழ்மையான ஒரு குடும்பத்தில் இருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் சந்தோஷங்களுக்கும் இடையான பிணைப்பை காட்டியுள்ள திரைப்படம் தான் எறும்பு.
படம் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ