- Advertisement -
சூர்யாவுடன் இணைந்து ஆய்த எழுத்து திரைப்படத்தில் நடித்த நடிகை, கணவரை திடீரென விவாகரத்து செய்திருக்கிறார்.
கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆய்த எழுத்து. மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். படத்தில் சூர்யா, சித்தார்த், ஈஷா தியோ, த்ரிஷா, மாதவன், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஈஷா தியோ. இவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி மற்றும் தர்மேந்திரா நட்சத்திர தம்பதியின் மகள் ஆவார். இவர் பாலிவுட்டில் முதலில் அறிமுகமாகி ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான் உள்ளிட்ட டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
