spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபகத் பாசில் நடிக்கும் 'ஆவேஷம்'..... மிரட்டலான டீசர் வெளியீடு!

பகத் பாசில் நடிக்கும் ‘ஆவேஷம்’….. மிரட்டலான டீசர் வெளியீடு!

-

- Advertisement -

பகத் பாசில் நடிக்கும் 'ஆவேஷம்'..... மிரட்டலான டீசர் வெளியீடு!நடிகர் பகத் பாசில் மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். தனது கண்களிலேயே நடிப்பை கற்றுக் கொடுப்பவர். நடிப்பு அரக்கன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழில், வேலைக்காரன், விக்ரம், மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டி இருந்தார். மேலும் பகத் ஃபாசில் தமிழில் மாரீசன் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பகத் பாசில் உடன் இணைந்து வடிவேலு நடிக்கிறார்.

அதேசமயம் மலையாளத்தில் ஆவேஷம் எனும் படத்திலும் நடிக்கிறார் பகத் பாசில். இந்த படத்தை ஜித்து மாதவன் இயக்குகிறார். இதில் பகத் பாசிலுடன் இணைந்து சஜின் கோபு, மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யார்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீர் தாஹிர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.

we-r-hiring

சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரின் மூலம் பகத் பாஸில் இந்த படத்தில் வேறொரு பரிமாணத்தில் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ