நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பல்வேறு தடைகளை தாண்டி பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ல் வெளியானது அயலான். சிவகார்த்திகேயனின் 14 வது படமான இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, இவர்களுடன் இணைந்து யோகி பாபு, கருணாகரன், பால சரவணன், இஷா கோபிகர், பானுப்பிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் நான்கு நாட்களிலேயே 50 கோடி வசூலை கடந்ததாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
சயின்ஸ் பிக்சன், பேண்டஸி கதை களத்தில் வெளியான இப்படம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போலவே குடும்பங்கள் ரசிக்கும் வண்ணம் இருந்தமையால் தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் உலக அளவில் 75 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.