Homeசெய்திகள்சினிமாபிரபல இயக்குனர் சூர்யபிரகாஷ் மரணம்.... நடிகர் சரத்குமார் இரங்கல்!

பிரபல இயக்குனர் சூர்யபிரகாஷ் மரணம்…. நடிகர் சரத்குமார் இரங்கல்!

-

பிரபல இயக்குனர் சூர்யபிரகாஷ் காலமானார்.
பிரபல இயக்குனர் சூர்யபிரகாஷ் மரணம்....நடிகர் சரத்குமார் இரங்கல்!கடந்த 2000 ஆம் ஆண்டு சரத்குமார்,மீனா வடிவேலு, மணிவண்ணன், மனோரமா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான மாயி திரைப்படத்தை இயக்கியவர் தான் சூர்யபிரகாஷ். இவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் படத்தையும் இயக்கி இருந்தார். இவர் இன்று காலை (மே 27) சென்னையில் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற இருக்கிறது. திரை பிரபலங்கள் பலரும் சூரிய பிரகாஷின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

MUST READ