- Advertisement -
ஃபகத் ஃபாசிலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் ஆவேஷம் படத்திலிருந்து முதல் பாடல் ரெளியாகி உள்ளது.ட
மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். அனைத்து படங்களிலும் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பினால் ஹீரோவையே மிஞ்சி விடுவார். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அவரது நடிப்பிற்கு ஈடு அவர் மட்டுமே. மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர் பல படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், ஆகிய படங்களில் வில்லனாக நடித்து தனி ரசிகர்களை பெற்றார்.
