Homeசெய்திகள்சினிமா'கேம் சேஞ்சர்' படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த படக்குழு..... உற்சாகத்தில் ரசிகர்கள்!

‘கேம் சேஞ்சர்’ படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த படக்குழு….. உற்சாகத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். 'கேம் சேஞ்சர்' படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த படக்குழு..... உற்சாகத்தில் ரசிகர்கள்!படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அஞ்சலி, சுனில், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் இப்படம் ரிலீசாகாமல் நிலுவையில் இருந்து இருப்பினும் ஒரு சில காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் உள்ளது . இது ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்கள் பலரும் படத்தின் அப்டேட்டுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி ஏற்கனவே கடந்த தீபாவளியை முன்னிட்டு கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று படக்குழுவும் அறிவித்திருந்தது. ஆனால் திட்டமிட்டபடி பாடல் வெளியாகாதது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடல் நடிகர் ராம்சரணின் பிறந்தநாளுக்கு விருந்து கொடுக்கும் வகையில்
நாளை  காலை 9 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ