Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் ஆதரவை பெறும் 'கேங்கர்ஸ்' .... ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

ரசிகர்களின் ஆதரவை பெறும் ‘கேங்கர்ஸ்’ …. ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

-

- Advertisement -

கேங்கர்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.ரசிகர்களின் ஆதரவை பெறும் 'கேங்கர்ஸ்' .... ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி சுந்தர்.சி இயக்கத்தில் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் கேங்கர்ஸ். இந்த படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்திருந்தார். அதாவது ஏற்கனவே சுந்தர்.சி – வடிவேலு இருவரும் இணைந்து தலைநகரம், நகரம் போன்ற படங்களில் நடித்திருந்தன. அந்த படங்களில் இடம்பெற்ற காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே இந்த கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அதிலும் இந்த படத்தில் பழைய வடிவேலுவை பார்க்க முடிந்தது. எனவே ரசிகர்கள் இந்த படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆதரவை பெறும் 'கேங்கர்ஸ்' .... ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!இந்நிலையில் இப்படம் இந்த மாத இறுதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

கேங்கர்ஸ் திரைப்படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சி. சத்யா இதற்கு இசையமைத்துள்ளார். படத்தில் கேத்தரின் தெரசா, வாணி போஜன், மைம் கோபி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ