spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகருடன் படத்தின் டப்பிங் தொடக்கம்... கையில் கட்டுடன் பேசும் சூரி...

கருடன் படத்தின் டப்பிங் தொடக்கம்… கையில் கட்டுடன் பேசும் சூரி…

-

- Advertisement -
சூரி நடிக்கும் கருடன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பரோட்டா எவ்வளவு பிரபலமோ அதே போல, கோலிவுட் திரையுலகில் அவ்வளவு பிரபலம் பரோட்டா சூரி. நடிகர் சூரி தொடக்கத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது முகம் ரசிகர்களிடம் பதிவாகவில்லை. வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் தான் நடிகர் சூரியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி இன்று வரை சூரியின் திரைவாழ்வில் முக்கியமான ஒன்று. இதையடுத்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூரியின் திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மான் கராத்தே என அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடித்த படங்கள் ஏராளம்.

அடுத்து ரஜினி, சூர்யா, அஜித்குமார் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் முதல் முறையாக ஹீரோகாவ நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
we-r-hiring

இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தில் நடித்தார். இதனிடையே, துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடித்துள்ளார். வெற்றிமாறன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கையில் கட்டுடன் நடிகர் சூரி டப்பிங் பேசும் காணொலி வெளியாகி உள்ளது.

MUST READ