ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படமானது அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தின் டீசர் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் தலைவர் 171 படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் ரஜினி தாதாவாக நடிக்க உள்ளார் எனவும் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர்களுடன் இணைந்து சாண்டி மாஸ்டர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர் மைக் மோகன் நடிகை இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே மைக் மோகன், விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தலைவர் 171 படத்தில் மைக் மோகன் வில்லானாக நடிக்கும் தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -