Homeசெய்திகள்சினிமாஒரே நாளில் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய 'கோட்'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே நாளில் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய ‘கோட்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் உள்ள திரையரங்களில் பிரம்மாண்டமாக வெளியானது. ஒரே நாளில் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய 'கோட்'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!வயதான லுக்கில் தந்தையாகவும் டி ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் இளமையான தோற்றத்தில் மகனாகவும் இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருந்தார். அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் நடிகர் விஜய், ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டியுள்ளார். பிரசாந்த், பிரபுதேவா போன்றோரும் தனக்கான கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக தந்துள்ளனர். மேலும் படத்தில் இடம்பெற்ற கேமியோ ரோல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி படத்தில் நிறைய சஸ்பென்ஸ்களையும் வைத்திருந்தனர். இவை அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்திய பகுதிகள் என வெளியான அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரே நாளில் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய 'கோட்'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அந்த வகையில் இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் 126 கோடிகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றும் படக்குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் கோட் திரைப்படத்தை தளபதி திருவிழாவாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ