விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்தப் படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் அயலான் பட இயக்குனர் ஆர் ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளாராம். இதற்கிடையில் மீண்டும் மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே நித்திலன் சாமிநாதன் மகாராஜா படத்திற்கு பிறகு நயன்தாராவை வைத்து மகாராணி என்னும் திரைப்படத்தை இயக்கப் போகிறாராம். அடுத்தது தனுஷிடமும் கதை ஒன்றை சொல்லி இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே நித்திலன், மற்ற கமிட்மெண்டுகளை முடித்த பிறகு விஜய் சேதுபதியை மீண்டும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் விஜய் சேதுபதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
