Homeசெய்திகள்சினிமா'பார்பி 2' படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி: வார்னர் Bros மற்றும் படக்குழு இடையே ஊதியப் பேச்சுவார்த்தையில்...

‘பார்பி 2’ படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி: வார்னர் Bros மற்றும் படக்குழு இடையே ஊதியப் பேச்சுவார்த்தையில் சிக்கல்!

-

- Advertisement -

1.4 பில்லியன் டாலர் வசூல் சாதனை படைத்த ‘பார்பி’! இரண்டாம் பாகத்திற்கு 20 மில்லியன் டாலர் சம்பளம் கேட்கும் ரயான் காஸ்லிங்?'பார்பி 2' படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி: வார்னர் Bros மற்றும் படக்குழு இடையே ஊதியப் பேச்சுவார்த்தையில் சிக்கல்!

உலக அளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்த ‘பார்பி’ (Barbie) திரைப்படத்தின் இரண்டாம் பாகம் (Sequel) உருவாகி வரும் சூழலில், அதன் தயாரிப்புப் பணிகளில் தற்போது முடக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘வார்னர் பிரதர்ஸ்’ (Warner Bros) மற்றும் முன்னணிப் படக்குழுவினரிடையே ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், ‘பார்பி 2’ படத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

we-r-hiring

1.4 பில்லியன் டாலர் வசூலும் 6 முறை நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களும்
கடந்த 2023-ஆம் ஆண்டு திரைக்கு வந்த ‘பார்பி’ திரைப்படம், உலக அளவில் 1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்து உலகச் சாதனையைப் படைத்தது. இதன் மூலம், உலகளவில் அதிக வசூல் ஈட்டிய பெண் இயக்குநர் என்ற பெருமையை இயக்குநர் கிரெதா ஜெர்விக் (Greta Gerwig) பெற்றார். முதல் பாகத்தின் இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்காக 6-க்கும் மேற்பட்ட முறை புதிய ஒப்பந்தப் முன்மொழிவுகளை வழங்கிப் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், இயக்குநர் கிரெதா ஜெர்விக், இணைத் திரைக்கதை ஆசிரியர் நோவா பாம்பாக், முதன்மை நடிகையும் தயாரிப்பாளருமான மார்கோ ராபி (Margot Robbie) மற்றும் ‘கென்’ கதாபாத்திரத்தில் நடித்த ரயான் காஸ்லிங் (Ryan Gosling) ஆகியோர் அந்த ஒப்பந்தங்களை நிராகரித்துள்ளனர்.

'பார்பி 2' படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி: வார்னர் Bros மற்றும் படக்குழு இடையே ஊதியப் பேச்சுவார்த்தையில் சிக்கல்!

கூடுதல் ஊதியக் கோரிக்கையும் ஆஸ்கர் நாயகனின் நிபந்தனையும்
படத்தில் பணியாற்றும் முக்கியக் கலைஞர்கள் அனைவரும் தங்களுக்கு அதிகபட்ச முன்பணக் கட்டணமும் (Upfront fees), லாபத்தில் கூடுதல் பங்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முதல் பாகத்தில் ‘கென்’ கதாபாத்திரத்தில் நடித்து ஆஸ்கர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட நடிகர் ரயான் காஸ்லிங், இரண்டாம் பாகத்தில் நடிக்க 20 மில்லியன் டாலர் சம்பளம் கோருவது பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது.

'பார்பி 2' படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி: வார்னர் Bros மற்றும் படக்குழு இடையே ஊதியப் பேச்சுவார்த்தையில் சிக்கல்!

கைநழுவும் காப்புரிமை: வார்னர் பிரதர்ஸுக்கு நெருக்கும் கெடு!
முதல் பாகத்திற்கான ஒப்பந்தத்தின் போது, ‘இரண்டாம் பாகத்தில் கட்டாயம் நடிக்க வேண்டும்’ என்ற எந்தவொரு விதையும் சேர்க்கப்படாததே தற்போது தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், உச்ச நட்சத்திரங்களுடன் புதிதாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் குறித்த காலத்திற்குள் ‘பார்பி 2’ படத்திற்கான பணிகளை முறைப்படி தொடங்கத் தவறினால், அப்படத்திற்கான காப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமைகள் அனைத்தும் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனமான ‘மேட்டெல்’ (Mattel) வசமே திரும்பச் சென்றுவிடும் அபாயமும் நிலவுகிறது.
'பார்பி 2' படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி: வார்னர் Bros மற்றும் படக்குழு இடையே ஊதியப் பேச்சுவார்த்தையில் சிக்கல்!ஹாலிவுட் திரையுலகின் மிகப்பெரிய ‘பிளாக்பஸ்டர்’ திரைப்படத்தின் தொடர்ச்சி உருவாகுமா அல்லது கைவிடப்படுமா என்பது, வரும் நாட்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் முடிவிலேயே தெரியவரும்.

50 வருட திரையுலகச் சாதனை.. 3 ஆஸ்கர் விருதுகள்! ஸ்பீல்பெர்க்கிற்கு நியூயார்க் அருங்காட்சியகம் செலுத்தும் மகுடம்!

MUST READ