Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

‘குட் பேட் அக்லி’ ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.'குட் பேட் அக்லி' ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

கடந்த ஏப்ரல் 10 அன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித்தின் 63வது படமான இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். அபிநந்தன் ராமானுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளைக் கவனித்திருந்தார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, கார்த்திகேயா தேவ், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா வாரியர் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் தரமான விருந்து படைத்தது. எனவே இந்த படத்தை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை ஜாலியான கதாபாத்திரத்தில் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காட்டியிருந்தார் ஆதிக். 'குட் பேட் அக்லி' ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!எனவே ஆதிக் ரவிச்சந்திரனையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் இப்படம் உலக அளவில் சுமார் ரூ.250 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது அஜித்தின் சினிமா கேரியரில் அதிக வசூலை வாரி குவித்த படம் என்ற சாதனையை குட் பேட் அக்லி திரைப்படம் படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மே மாதம் 8ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ