spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தீனா' பட பாடலை ரீமேக் செய்யும் 'குட் பேட் அக்லி' படக்குழு!

‘தீனா’ பட பாடலை ரீமேக் செய்யும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படக்குழு தீனா படத்தின் பாடலை ரீமேக் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.'தீனா' பட பாடலை ரீமேக் செய்யும் 'குட் பேட் அக்லி' படக்குழு!

அஜித்தின் 63வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்துள்ளது. ஒரு சில காட்சிகள் மட்டும் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் இப்படமானது 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபகாலமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.'தீனா' பட பாடலை ரீமேக் செய்யும் 'குட் பேட் அக்லி' படக்குழு! இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் ‘தீனா’ படத்தின் பாடல் ஒன்று ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த திரைப்படம் தான் தீனா. இந்த படத்தில் வத்திக்குச்சி பத்திக்காதுடா எனும் பாடல் இடம்பெற்றிருந்த நிலையில் இப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எனவே இப்பாடலை, குட் பேட் அக்லி படத்தில் ரீமேக் செய்வதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

we-r-hiring

ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டபோது அதில் அஜித், தீனா பட லுக்கில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ