குட் பேட் அக்லி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது.
அஜித்தின் 63வது படமாக உருவாகியிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இப்படத்தில் நடிகர் அஜித், தீனா பட லுக்கில் நடித்துள்ளார். எனவே இதுவும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு மற்றுமொரு காரணமாகும். அதன்படி ரசிகர்கள் பலரும் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படத்தை திரையில் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதன்படி படக்குழுவும் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் டீசர் எப்போது வெளியாகும்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.