குட் பேட் அக்லி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் நேற்று (பிப்ரவரி 6) நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்த படம் நடிகர் அஜித்தின் 63 வது படமாகும். இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இப்படம் 2025 தீபாவளிக்கு திரைக்கு வரும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.