- Advertisement -
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து, ஒரு இடைவெளிக்கு படக்குழு சென்னை திரும்பியது. மீண்டும் வௌிநாடு திரும்பிய படக்குழுவினர், படப்பிடிப்பில் முழுவீட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் அண்மையில் வெளியானது. அதன்படி, அஜித் குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.



