Homeசெய்திகள்சினிமாதல, தளபதி படங்களை அள்ளிய பிரபல ஓடிடி தளம்

தல, தளபதி படங்களை அள்ளிய பிரபல ஓடிடி தளம்

-

விஜய் மற்றும் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் இரு திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது. 
துணிவு படத்திற்கு பிறகு அஜித் குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இத்திரைப்டத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் மைத்ரி மூவிஸ் நிறுவனம் இத்திரைப்டத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல மறுபக்கம் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் தி கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், அஜ்மல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும் இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் டிஜிட்டல் உரிமையையும் பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. தி கோட் படத்தின் உரிமை, சுமார் 110 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமை, 95 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

MUST READ