spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇவர்கள் இயக்கத்தில் தான் மீண்டும் விஜய்க்கு மியூசிக் போடுவேன்.... ஸ்ட்ரிக்டா சொன்ன ஜிவி பிரகாஷ்!

இவர்கள் இயக்கத்தில் தான் மீண்டும் விஜய்க்கு மியூசிக் போடுவேன்…. ஸ்ட்ரிக்டா சொன்ன ஜிவி பிரகாஷ்!

-

- Advertisement -

இவர்கள் இயக்கத்தில் தான் விஜய்க்கு மியூசிக் போடுவேன்.... ஸ்ட்ரிக்டா சொல்லிய ஜிவி பிரகாஷ்!தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைலில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் ஜி வி பிரகாஷ் குமார். மெலோடி, கானா, சூப் சாங், மாஸ் பிஜிஎம் என இவர் இசையில் எல்லாமே டாப் நாட்ச் ஆக இருக்கும். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன், பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களுக்கு ஜிவி இசையமைத்திருந்தார். இந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும் இசையில் ஒரு புதுமையும் படைத்திருந்தார் ஜி.வி. பிரகாஷ் .அதேபோல சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்துக்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீசான இப்படத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்து மாபெரும் வரவேற்பை கொடுத்தனர் ரசிகர்கள். மேலும் இப்படத்துக்காக ஜிவி பிரகாஷ் தேசிய விருதையும் வென்றார். இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்காரா இருவரும் தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.இவர்கள் இயக்கத்தில் தான் விஜய்க்கு மியூசிக் போடுவேன்.... ஸ்ட்ரிக்டா சொல்லிய ஜிவி பிரகாஷ்! இந்நிலையில் இவர்கள் இருவருமே விஜய்க்காக கதைகளை ரெடியாக வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு இப்படங்களில் நடிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும். அதைத்தொடர்ந்து இப்படங்களுக்கு யார் இசையமைப்பார் என்ற கேள்விகளும் எழுந்தன. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜிவி பிரகாஷ் நேர்காணல் ஒன்றில் “வெற்றிமாறன் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்திற்கும், சுதா கொங்காரா விஜய் கூட்டணியில் உருவாகும் படத்திருக்கும் நான் தான் இசையமைக்க உள்ளேன். இப்படங்கள் தொடங்கப்படும் போது இதைப்பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். இவர்கள் இயக்கத்தில் தான் விஜய்க்கு மியூசிக் போடுவேன்.... ஸ்ட்ரிக்டா சொல்லிய ஜிவி பிரகாஷ்!மேலும் நான் விஜய்யோடு தொடர்பில் தான் இருக்கிறேன். சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது பெற்றபோது விஜய் எனக்கு போன் செய்து வாழ்த்தினார்”என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே விஜயின் தலைவா, தெறி போன்ற படங்களில் ஜிவி பிரகாஷ் மரண மாஸாக இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த கூட்டணி இணைவது ஒரு தரமான சம்பவமாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

MUST READ