சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராகி அதன் பின்பு வெள்ளி திரையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பின்பு மாபெரும் ஹீரோவாக மாறியவர் சிவகார்த்திகேயன். இவருடைய ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சில தெலுங்கு படங்களுக்கு தமிழ் டப்பிங் பேசியுள்ளார். அந்த வகையில் 2011 இல் சித்தார்த், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த “ஓ மை பிரண்ட்” என்னும் தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கில் ஹீரோவான சித்தார்த்துக்கு டப்பிங் பேசி இருந்தார் சிவகார்த்திகேயன்.
#OhMyFriend -> Sivakarthikeyan for Siddharth#Ayalaan -> Siddharth for Sivakarthikeyan
Their Bonding 🫂❣️pic.twitter.com/8z6Qy6sYy2
— AmuthaBharathi (@CinemaWithAB) December 13, 2023
இப்படம் தமிழில் “ஸ்ரீதர்”என்ற பெயரில் வெளியானது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள அயலான் படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு சித்தார்த் தான் வாய்ஸ் கொடுத்துள்ளார். அன்று சித்தார்த்திற்காக சிவகார்த்திகேயனின் குரல் டப்பிங்கில் ஒலித்தது. இன்று சிவகார்த்திகேயனுக்காக அயலான் படத்தில் சித்தார்த்தின் குரல் ஒலிக்கப் போகிறது. இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அயலான் திரைப்படம் நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பின் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.