spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகள்வன் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

கள்வன் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

-

- Advertisement -
ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா நடித்துள்ள கள்வன் படத்திலிருந்து புதிய பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்து புகழ் பெற்றவர் ஜி.வி.பிரகாஷ். இசை மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வரும் ஜி.விபிரகாஷ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவரது நடப்பில் வெளியான பேச்சுலர், ஜெயில் ஆகிய படங்கள் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் கள்வன் என்ற படத்தில் நடித்துள்ளார். ம் இந்த படத்தில் பாரதிராஜா, இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

we-r-hiring
ஆக்சஸ் பிலிம் பேக்டரி இப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், படத்தின் உரிமையை விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

கள்வன் படத்தின் டீசர் மற்றும் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. பிரபல இசை அமைப்பாளர் டி.இமான் இந்த பாடலை வெளியிட்டு உள்ளார்.

MUST READ