Homeசெய்திகள்சினிமாஇந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா 'கோட்' படத்தை இன்னும் நல்லா எடுத்துருப்பேன்...... வெங்கட் பிரபு!

இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா ‘கோட்’ படத்தை இன்னும் நல்லா எடுத்துருப்பேன்…… வெங்கட் பிரபு!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான படம் தான் கோட். இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா 'கோட்' படத்தை இன்னும் நல்லா எடுத்துருப்பேன்...... வெங்கட் பிரபு!இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதுவும் அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு பிறகு ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இருப்பினும் இந்த படம் குறித்து சிலர் விமர்சித்து வந்தனர். அதாவது இந்த படம் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்த ராஜதுரை படத்தை போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா 'கோட்' படத்தை இன்னும் நல்லா எடுத்துருப்பேன்...... வெங்கட் பிரபு!இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “அப்பா – மகன் கதை என்பது யுனிவர்சல் கதை. கோட் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் ராஜதுரை படத்தின் கதை என்பது எனக்கு தெரியவந்தது. சினிமாவை பார்த்து தான் சினிமாவை கற்றுக் கொண்டேன். கோட் படத்தை எடுப்பதற்கு முன் பல படங்களை பார்த்தேன் ஆனால் ராஜதுரை படத்தை பார்த்திருந்தால் கோட் படத்தை இன்னும் நன்றாக எடுத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ