spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னை நம்பி படம் இயக்க தயங்கினர்... ஹன்சிகா மோத்வானி வேதனை...

என்னை நம்பி படம் இயக்க தயங்கினர்… ஹன்சிகா மோத்வானி வேதனை…

-

- Advertisement -
தமிழ் திரையுலகில் அமுல் பேபியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கதாநாயகி ஹன்சிகா மோத்வானி. தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, அண்மையில் அவரது நடிப்பில் பார்ட்னர் என்ற திரைப்படம் வெளியானது. அதில், ஆதிக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். மேலும், சாந்தனு மற்றும் முகின் ராவுடன் இணைந்து இணைய தொடரிலும் அவர் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பு மற்றும் தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஹன்சிகா மோத்வானி, சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலத்தில் என்னை நம்பி கனமான கதாபாத்திரங்களை வழங்க இயக்குநர்கள் தயங்கினர். இதைத் தொடர்ந்து என் நடிப்பையும், திறமையையும் நிரூபித்து காட்டினேன். அதன்பிறகு என்னை இன்று தனி நாயகியாக ஒப்பந்தம் செய்கின்றனர். அதற்கு காரணம் என் உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் என நம்புகிறேன். என்னை நம்பி நல்ல கதாபாத்திரங்களை ஒப்படைக்கும்போது, அதற்கான முழு பொறுப்பும் எனக்கு உள்ளது என தெரிவித்தார்.

MUST READ