நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார். இவர் பொறியாளன், சிந்து சமவெளி போன்ற படங்களின் மூலம் திரைக்கரையில் நுழைந்திருந்தாலும் பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே போன்ற படங்கள்தான் ஹரிஷ் கல்யாணை பிரபலமாக்கியது. அதே சமயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் டீசல் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ் பி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் டீசல் படத்தை தயாரிக்க சண்முகம் முத்துசாமி இதனை இயக்கியிருக்கிறார். திபு நினன் தாமஸ் இந்த படத்தின் இசையமைக்கும் பணிகளை கவனிக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் டீசல் திரைப்படம் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி தினத்தை முன்னிட்டு அமரன், பிரதர் போன்ற பல படங்கள் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -