spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'கடைசி உலகப் போர்'...... ரிலீஸ் எப்போது?

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘கடைசி உலகப் போர்’…… ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் கடைசி உலகப் போர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'கடைசி உலகப் போர்'...... ரிலீஸ் எப்போது?

ஹிப் ஹாப் ஆதி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரையில் தோன்றியவர். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, ஆம்பள போன்ற படங்களுக்கும் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் போன்ற படங்களுக்கும் இசையமைத்து தரமான வெற்றி கண்டார். மேலும் இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டிய இவர் நட்பே துணை, நான் சிரித்தால், வீரன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் பிடி சார் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இவ்வாறு தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி அடுத்ததாக கடைசி உலகப் போர் என்ற படத்தை தானே தயாரித்து இயக்கி நடித்து இசையமைத்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'கடைசி உலகப் போர்'...... ரிலீஸ் எப்போது?இந்தப் படத்திற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்ய பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார். நேற்று (ஜூலை 18-ம் தேதி) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 19) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி கடைசி உலகப் போர் படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ