மிரட்டலாக வெளியான ஜோக்கர் 2 முன்னோட்டம்
- Advertisement -
ஹாலிவுட்டில் உருவாகி இருக்கும் ஜோக்கர் 2 படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.

ஹாலிவுட்டில் ஆண்டுக்கு பல படங்கள் வெளியாகின்றன. அதில் சில ஆங்கிலத்தை தாண்டி இந்தியாவிலும் ஹிட் அடிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் பல ஹாலிவுட் படங்கள் வெற்றி பெறுகின்றன. பல படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து பல விருகளை வெல்கின்றன. அந்த வரிசையில் சூப்பர் ஹிட் திரைப்படம் ஜோக்கரும் அடங்கும். ஜோக்கர் படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதில் ஜாக்கின் பீனிக்ஸ், ரோபர்ட் ஆகிய பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


முதல் பாகம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஹாலிவுட் மட்டுமன்றி ஒட்டுமொத்த திரை உலகமும் இப்படத்தை கொண்டாடித் தீர்த்தது. டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில், ஜாக்குவின் பீனிக்ஸ் நடிப்பில், இரண்டாம் பாகமும் உருவாகி இருக்கிறது. முதல் பாகத்திற்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்பட பல உயரிய விருதுகள் கிடைத்தன. முதல் பாகத்தின் வெற்றி தான் இரண்டாம் பாகத்திற்கும் வித்திட்டது. உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்த இத்திரைப்படத்தின், இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
பிரபல பாப் பாடககி லேடி காகா நாயகியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். இரண்டாம் பாகத்திற்கு ஜோக்கர் ஃபாலி அ டியூக்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் முன்னோட்டம் மிரட்டலாக இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.