spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவனிதா மகளுக்காக தான் அந்தப் படத்தில நடிச்சேன்... இல்லன்னா ஓடி வந்துருப்பேன்.... ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்!

வனிதா மகளுக்காக தான் அந்தப் படத்தில நடிச்சேன்… இல்லன்னா ஓடி வந்துருப்பேன்…. ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்!

-

- Advertisement -

நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில், தான் நடித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.வனிதா மகளுக்காக தான் அந்தப் படத்தில நடிச்சேன்... இல்லன்னா ஓடி வந்துருப்பேன்.... ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்!தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் ராபர்ட் மாஸ்டர். இவரை விஜய், சிம்பு பாடல்களில் பார்த்ததுண்டு. அந்தளவிற்கு இவர் மிகவும் பிரபலமானவர். அதே சமயம் இவர், வனிதா விஜயகுமாரின் விஷயத்திலும் பிரபலமானார். வனிதா – ராபர்ட் மாஸ்டர் இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை ராபர்ட் மாஸ்டர் கையில் பச்சை குத்தி இருந்தார். இவ்வாறு இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில் சில நாட்களிலேயே ராபர்ட் மாஸ்டர் வனிதாவிடம் இருந்து விலகிவிட்டார். வனிதா மகளுக்காக தான் அந்தப் படத்தில நடிச்சேன்... இல்லன்னா ஓடி வந்துருப்பேன்.... ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்!இந்நிலையில் தான் சமீபத்தில் வெளியான மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் ராபர்ட் மாஸ்டர், வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரே இயக்கியிருந்த நிலையில் அவருடைய மகள் ஜோவிகா இப்படத்தை தயாரித்திருந்தார். இதில் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது.வனிதா மகளுக்காக தான் அந்தப் படத்தில நடிச்சேன்... இல்லன்னா ஓடி வந்துருப்பேன்.... ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்! இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் சமீபத்தில் நடந்த பேட்டியில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில், நான் நடித்தது வனிதாவிற்காக அல்ல ஜோவிகாவிற்காக தான் என்று கூறியுள்ளார். “சிறுவயதிலிருந்தே ஜோவிகாவை எனக்கு தெரியும். அந்தப் பொண்ணுடன் டிராவல் பண்ணி இருக்கிறேன். அவருடைய படிப்பு செலவையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். நான் வனிதாவிற்காக அந்த படத்தில் நடிக்கப் போகவில்லை. அவருடைய பொண்ணுக்காக தான் போனேன். அந்த பொண்ணோட பணத்தை வீணடித்து விடுவார்கள் என்று உதவி செய்யலாம் என்று தான் போனேன். ஆனால் அது எனக்கே ரிவர்ஸ் ஆகிவிட்டது. வனிதா மகளுக்காக தான் அந்தப் படத்தில நடிச்சேன்... இல்லன்னா ஓடி வந்துருப்பேன்.... ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்!முதலில் அந்த படத்தில் என்னை இயக்குனராக தான் கமிட் செய்தார்கள். ஆனால் அங்கு போய் பார்த்தால் வனிதா அந்த படத்தை இயக்குறாங்க. வனிதாவிடம் எதுவும் பேச முடியவில்லை. ஏனென்றால் அவர் சொல்வதை தான் நாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். கடைசியில் அவர் சொல்வதை தான் கேட்க வேண்டியதாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் நடித்து முடித்தால் தான் பாஸ்போர்ட் கொடுப்பார்கள் என்று நடித்துக் கொடுத்தேன். இல்லையென்றால் பாதியிலேயே ஓடி வந்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ