spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 : இயக்குநர் ஷங்கர் என்ன சொல்கிறார் ?

இந்தியன் 2 : இயக்குநர் ஷங்கர் என்ன சொல்கிறார் ?

-

- Advertisement -

இந்தியன்  2 : இயக்குநர் ஷங்கர் என்ன சொல்கிறார் ?

இந்தியன் பாகம் 2 குறித்து இயக்குநர் ஷங்கர் பேசுகையில்,  இந்தியன் முதல் பாகம் எடுக்கும்பொழுது இரண்டாம் பகாத்திற்கான எண்ணம் கிடையாது. ஆனால் அதன் இரண்டாம் பாகம் உருவாக்க இத்தனை காலம் ஆகிவிட்டது.

we-r-hiring

சூப்பர் ஹீரோக்களுக்கு வயதே கிடையாது. அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை ஒழுக்கமும் நேர்மையும் தான் அதுவே இந்த பாகத்திற்கு அடித்தளம். ஒவ்வொரு மனிதனின் மனதிலும் உள்ள கோபமும் ஆதங்கமும் தான் சேனாபதி கதாபாத்திரம்.

‘ஒரு பக்கம் கள்ளச்சாராயம்; மறு பக்கம் கொலை.. சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு’ – அண்ணாமலை தாக்கு

இந்தியன் முதல் பாகத்தில் அப்போது இருந்த மேக்கப்பால் கமல் சாரின் முகம் சரியாக தெரியவில்லை என்ற விவாதம் இருந்தது இந்த முறை கமல் சாரின் நடிப்பு நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து மேக்கப் செய்துள்ளோம். இந்தியன் 2 வில் கமல் சாரின் முக பாவனை நன்றாக தெரியும்.

முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரிக்க இருந்தார் சுபாஸ்கரனின் அன்பு கட்டளையால் லைக்கா இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். பல விஷயங்களை கற்பனை செய்தாலும் அதை நிஜம் ஆக்குவதற்கு சுபாஷ்கரணின் உதவி இல்லை என்றால் சாத்தியமே இல்லை.

இந்த படத்தில் காலண்டர் பாடல், பல குணச்சித்திர நடிகர்கள், ஒளிப்பதிவு, செட் பணிகள் என பல விஷியங்கள் புதுமையாக இருக்கும் அதற்குமேல் கமல் சார் தனது நடிப்பால் அனைத்து தொழிநுட்ப கலைஞர்களையும் மிஞ்சி விட்டார்.

MUST READ