spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி இருக்கும்..... ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!

‘இந்தியன் 2’ ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி இருக்கும்….. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!

-

- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரின் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள படம் தான் இந்தியன் 2. இந்த படத்தை லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. 'இந்தியன் 2' ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி இருக்கும்..... ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். கடந்த 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்தியன் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் ஊழலுக்கு எதிரான கதைகளத்தில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் இதன் அனைத்து பாடல்களும் இணையத்தில் வெளியாகி டிரண்டிங்கில் இருக்கிறது. 'இந்தியன் 2' ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி இருக்கும்..... ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!மேலும் இந்த படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இதற்காக ப்ரோமோஷன் பணிகள் மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளிலும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சமீபத்தில் நடந்த பேட்டியில் இந்தியன் 2 படம் குறித்து பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது, “இந்தியன் 2 திரைப்படம் ஒரு இந்திய ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி இருக்கும். ஒவ்வொரு காட்சிகளும் தனித்துவமான செட்டப்பில் உண்மையான ஒரு நிகழ்வு போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.'இந்தியன் 2' ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி இருக்கும்..... ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!

ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியன் 2 ட்ரைலர் வெளியான போது அதன் ஒளிப்பதிவு நன்றாக வந்துள்ளது என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ