Homeசெய்திகள்சினிமாகைமாறிய சங்கரின் 'இந்தியன் 3'..... மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு!

கைமாறிய சங்கரின் ‘இந்தியன் 3’….. மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு!

-

- Advertisement -

இந்தியன் 3 திரைப்படம் கைமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது.கைமாறிய சங்கரின் 'இந்தியன் 3'..... மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு!

கடந்த 1996 இல் சங்கர், கமல் கூட்டணியில் இந்தியன் திரைப்படம் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே அதைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 திரைப்படத்தை சங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது. இருப்பினும் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இடம் பெற்ற இந்தியன் 3 ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆகையினால் இந்தியன் 2 படம் இழந்த வெற்றியை இந்தியன் 3 திரைப்படம் நிச்சயம் பெற்றுத்தரும் என படக்குழு நம்பிக்கையுடன் இருந்து வருகிறது. ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இந்தியன் 2 பட தோல்வியால் இந்தியன் 3 படத்திற்கு செலவிட மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.கைமாறிய சங்கரின் 'இந்தியன் 3'..... மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு! இதன் காரணமாக சங்கர் – லைக்கா நிறுவனத்திற்கு இடையே மனக்கசப்பு ஏற்பட இந்தியன் 3-யிலிருந்து லைக்கா விலகி விட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. அடுத்தது ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் இந்தியன் 3 திரைப்படத்தை கையில் எடுத்திருப்பதாகவும் இந்தியன் 3 தொடர்பான சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ