Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசன் பிறந்தநாள்... இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து...

கமல்ஹாசன் பிறந்தநாள்… இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து…

-

- Advertisement -
கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை வினோத் இயக்கும் புதிய படம் ஒன்றில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். கமல்ஹாசனின் 233 வது திரைப்படமான இந்த படத்திற்கு தற்காலிகமாக KH233 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசன் மற்றும் R மகேந்திரன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றனர். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.
கமல்ஹாசன் மற்றும் எச் வினோத் கூட்டணியில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மணிரத்னம் இயக்கத்திலும் கமல் நடிக்கிறார்.

இந்நிலையில், 69-வது பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் தக் லைஃப் படத்தின் அறிவிப்பு காணொலியும் வெளியானது.

MUST READ