Homeசெய்திகள்சினிமாஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் கூட்டணியில் இணைவாரா தனுஷ்?

ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் கூட்டணியில் இணைவாரா தனுஷ்?

-

- Advertisement -

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடைசியாக ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தேவரா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் கூட்டணியில் இணைவாரா தனுஷ்?இப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அடுத்தது பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இயக்குனர் வெற்றிமாறன், கடைசியாக விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அதைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில்தான் சமீபத்தில் நடந்த பேட்டியில் ஜூனியர் என்டிஆர், இயக்குனர் வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியிருந்தார். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இவர்களின் கூட்டணி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. வடசென்னை படத்தின் வெளியீட்டின் போதே வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இரண்டாவது பாகத்தில் நடிகர் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்திருந்தது.ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் கூட்டணியில் இணைவாரா தனுஷ்? அந்த சமயத்திலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆனால் தற்போது வெற்றி மாறன், ஜூனியர் என்டிஆர் கூட்டணி கிட்டதட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் தனுஷ் இப்படத்தில் இணைவாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது தனுஷ் சமீபகாலமாக நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் பிஸியாக இருக்கிறார். ஆகையினால் தனுஷ் இவர்களது கூட்டணியில் இணைவாரா என்பது குறித்து ரசிகர்கள், சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இருப்பினும் இனிவரும் நாட்களில் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆர், தனுஷ் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

MUST READ