Homeசெய்திகள்சினிமாகவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தில் கதாநாயகி இவரா?.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தில் கதாநாயகி இவரா?…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தில் கதாநாயகி இவரா?.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அதே சமயம் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கவினுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் கவின். மேலும் பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் முதல் பாடலை பட குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் கவின் இந்த படத்தில் நடிகராக நடிக்கிறார் என்பதும் தெரிய வந்தது.கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தில் கதாநாயகி இவரா?.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கும் ஆதிதி பொஹங்கரின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் ஆதிதி பொஹங்கர், இப்படத்தில் ஜிமிக்கி எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இப்படத்தில் கீதா கைலாசம், ப்ரீத்தி, லால் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஆதிதி பொஹங்கர் ஏற்கனவே அதர்வாவின் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்திலும், ஆஷ்ரம் எனும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ