நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் திரைப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 21 வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க வில்லனாக ராகுல் போஸ் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இதில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படும் இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சிக்ஸ் பேக்கில் உடன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிப்பதால் தனது சிக்ஸ் பேக்கை மெயின்டயின் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி SK 21 படத்தின் பர்ஸ்ட் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த பர்ஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக்கில் காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சிக்ஸ் பேக் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.