Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' படத்தில் சிம்பு இணைவதற்கு இதுதான் காரணமா?

‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு இணைவதற்கு இதுதான் காரணமா?

-

நடிகர் சிம்பு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். 'தக் லைஃப்' படத்தில் சிம்பு இணைவதற்கு இதுதான் காரணமா?இதனை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. STR48 படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் பீரியாடிக் படமாக தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதே சமயம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் STR48 படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கிறது.

இப்படி இருக்கும் சூழலில் நடிகர் சிம்பு, தக் லைஃப் படத்தில் இணைந்துவிட்டதாக இன்று படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். 'தக் லைஃப்' படத்தில் சிம்பு இணைவதற்கு இதுதான் காரணமா?ஆதலால் STR48 படம் என்னாச்சு என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். தற்போது இது தொடர்பான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது STR48 படமானது சிம்புவின் சம்பளத்தை விட மூன்று மடங்கு பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது. ஆனால் தற்போதுள்ள சூழலில் சாட்டிலைட், டிஜிட்டல் வியாபாரம் குறைந்துவிட்டது. ஆகையினால் STR48 படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்
கூறப்படுகிறது. எனவே STR48 படத்தில் நடிக்க சிம்புவிற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணத்தை ஈடு செய்வதற்காகவே தக் லைஃப் படத்தில் சிம்புவை நடிக்க வைப்பதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் STR48 படம் கைவிடப்பட்டதா? அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பான தகவலை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

MUST READ