கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தி கடைசியாக , மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக வந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
அவர் தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.ஜப்பான் கார்த்தியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் இரட்டை வேடங்களில் நடிக்கும் ஒரு சுவாரஸ்யமான ஹெய்ஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படுகிறது.
நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் ஜப்பான் படக் குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். வரும் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து தற்போது ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.அந்த டீசரில் ஜப்பான் யார் என்பதை சிறிய அறிமுக வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவின் தொடக்கத்தில் எஸ் ஏ சந்திரசேகர் ” ஆண்டவருடைய அதிசய படைப்புகளில் அவன் ஒரு ஹீரோ” என்று கூறும் வசனங்களும், அடுத்து வரும் சில நொடிகளில், ரவுடிகள் கார்த்தியை யாருடா நீ என்று கேட்பதற்கு ” JAPAN,….. MADE IN INDIA…” என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.