Homeசெய்திகள்சினிமாஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் கூட்டணியின் புதிய படம்.... மேக்கிங் வீடியோ வெளியீடு!

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் கூட்டணியின் புதிய படம்…. மேக்கிங் வீடியோ வெளியீடு!

-

- Advertisement -

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் கூட்டணியின் புதிய படம்.... மேக்கிங் வீடியோ வெளியீடு!

தமிழ் சினிமாவில் தளபதி என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் மகன் தான் ஜேசன் சஞ்சய் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதன்படி தற்காலிகமாக JS01 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. சந்தீப் கிஷன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா இதில் கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். ஏற்கனவே இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று (மே 7) சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் சந்தீப் கிஷன் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அடுத்தது ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த புதிய படமானது சந்தீப் கிஷனின் 31வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ