spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஸ்பை திரில்லராக உருவாகும் ஜெயம் ரவி, அகமது கூட்டணியின் ஜன கன மன!

ஸ்பை திரில்லராக உருவாகும் ஜெயம் ரவி, அகமது கூட்டணியின் ஜன கன மன!

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜன கன மன திரைப்படத்தில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி தற்போது அகமது இயக்கத்தில் இறைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

we-r-hiring

இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் ஜெயம் ரவி, அகமது கூட்டணியில் ஜன கன மன திரைப்படம் தொடங்கப்பட்டது. இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன், டாப்ஸி, ரகுமான் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படம் தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி மற்றும் அகமது பேசியுள்ளனர்.
அதன்படி, “சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிநாட்டில் நடைபெற்று வந்த ஜன கன மன படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா போன்ற காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் அருமையாக இந்த படம் உருவாகி வருகிறது. ஸ்பை த்ரில்லர் கதை களத்தில் ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஹை பட்ஜெட் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இறைவன் படத்தின் வெற்றி இந்த படத்தை தொடங்க சிகப்பு கம்பளம் விரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

MUST READ