Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி, நித்யா மேனனின் 'காதலிக்க நேரமில்லை' .... இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

ஜெயம் ரவி, நித்யா மேனனின் ‘காதலிக்க நேரமில்லை’ …. இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

-

- Advertisement -

காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தை வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, நித்யா மேனனின் 'காதலிக்க நேரமில்லை' .... இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து லட்சுமி ராமகிருஷ்ணன், லால், வினய் ராய், ஜான் கொக்கென், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். காவெமிக் ஆரி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படமானது வருகின்ற ஜனவரி 14 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

we-r-hiring

இந்த ட்ரெய்லரில் நடிகர் ஜெயம் ரவி பிளேபாய் போல் காட்டப்பட்டுள்ளார். ஆண்கள் மீதும் திருமணத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத பெண்ணாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்குமான காதல், எமோஷன்ஸ் கலந்தது தான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை போல் தெரிகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ