spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉடல் நலக்குறைவால் உயிரிழந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி!

-

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அதன்படி கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. உடல் நலக்குறைவால் உயிரிழந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி!பின்னர் சைரன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் காதலிக்க நேரமில்லை, பிரதர், ஜீனி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. உடல் நலக்குறைவால் உயிரிழந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி!இந்நிலையில் ஜெயம் ரவியின் ரசிகர் ஒருவர் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னை கேகே நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலியை செலுத்தினார் ஜெயம் ரவி. உடல் நலக்குறைவால் உயிரிழந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி!இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் ஜெயம் ரவி , ராஜாவின் குடும்பத்தாருக்கு எந்த வகையிலாவது உதவி செய்வார் என்று நம்பப்படுகிறது. உடல் நலக்குறைவால் உயிரிழந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி!ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்ட ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் சார்பில் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ