Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'பிரதர்' படத்தின் அடுத்த அப்டேட்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘பிரதர்’ படத்தின் அடுத்த அப்டேட்!

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் பிரதர் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இறைவன் திரைப்படமும் இந்த ஆண்டுகளான சைரன் திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'பிரதர்' படத்தின் அடுத்த அப்டேட்! இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அந்த வகையில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் பிரபல இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவியின் 30வது படமான இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் இதில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா சாவ்லா நடித்திருக்கிறார். இந்த படமானது அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'பிரதர்' படத்தின் அடுத்த அப்டேட்!ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் பிரதர் படத்தின் அடுத்த அப்டேட் நாளை (ஜூலை 13) காலை 11.11 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அப்டேட் ரிலீஸ் தேதியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ